வண்ணாரப்பேட்டையிலிருந்து ஏ.ஜி-டி.எம்.எஸ் வரையிலான மெட்ரோ வழித்தடத்தைத் திருப்பூரிலிருந்து காணொளி காட்சிகளின் மூலம் பிரதமர் மோடி  திறந்து வைத்தார். இந்த நிலையில், பிப்ரவரி 10,11 ஆகிய தினங்களுக்கு மெட்ரோ ரயில் இலவசமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்.  வார விடுமுறையான நேற்று அதிகப்படியான மக்கள் ஆர்வத்துடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.