காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த இளைஞனுடன் தன்னைச் சேர்த்து வைக்கக்கோரி, ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நாடோடி இன இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு முயன்ற கோவை சரளா என்ற பெண்ணை மீட்ட காவல்துறையினர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.