முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் நாடாளுமன்ற மைய வளாகத்தில் இன்று திறக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாஜ்பாய் படத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் பங்கேற்றனர். பின்னர் தலைவர் வாஜ்பாய் குறித்து புகழ்ந்து பேசினார்கள்.