சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம், `மாமனிதன்'. இந்தப் படத்தின் ஷூட்டிங் மதுரை, தேனி, கேரளா போன்ற பல்வேறு இடங்களில் நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துவிட்டது. இதை சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.