கோவாவின் பாகா கடற்கரைக்குச் செல்லும் பாதையை கூகுள் மேப் தவறாகக் காட்டுகிறது என்கிறார்கள் அப்பகுதிவாசிகள். இதனால், பொறுமையிழந்த மக்கள் வழி மாறிச் செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு சரியான பாதை குறித்து தகவல் தெரிவிக்கும் வகையில் சிறிய பேனர் ஒன்றைச் சாலையில் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள்.