நாகையில் அமைந்துள்ள அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் மாசி மாதத்தில் இந்திரவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாளான நேற்று சிவபெருமான் அகோரமூர்த்தியாகத் தோன்றி மருத்துவாசுரன் என்னும் அசுரனை சம்ஹாரம் செய்யும்  வைபவம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெருவாரியாக கலந்துகொண்டனர்.