விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் 12 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பதினோராம் நாள் திருவிழாவாக புதுப்பேட்டை அம்மன் குளத்தில் வள்ளி சமேத முருகப் பெருமான் தெப்பத் திருவிழா நடந்தது.