கடைசியாக 1906-ல் பார்க்கப்பட்டு அழிந்ததாகக் கருதப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆமை ஒன்று திடீரெனத் தற்போது தோன்றிய அதிசயம் ஈகுவடார்நாட்டில் நடந்துள்ளது. இந்த நாட்டைச் சேர்ந்த கலபோகஸ் தீவு பெரிய ஆமைகள் பலவற்றின் பிறப்பிடமாக இருக்கிறது.  `Fernandina Giant Tortoise' இனத்தைச் சேர்ந்த பெண் ஆமை ஒன்று அந்தத் தீவில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.