`கிளையை ஒடிக்காமல் திருடவும்’ என்று முருங்கை மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட போர்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலையோரத்தில் இருக்கும் தன் வீட்டு முருங்கை மரத்திலிருந்து சிலர் முருங்கை காய் திருடுவதை கண்டறிந்த வீட்டின் உரிமையாளர் இந்தப் போர்டை வைத்துள்ளார். ஆனால், எந்த இடம் என்பது தெரியவில்லை.