பஞ்சபூதத் தலங்களுள் வாயுத்தலமாக அறியப்படும் காளஹஸ்தி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவராத்திரிப் பெருவிழா வரும்  27.2.2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மகாசிவராத்திரி 4.3.2019 அன்று நான்கு கால பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறும். அன்று சிவபெருமான் நந்திவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.