அபிநந்தனை விடுவிப்பதற்கு முன்னதாக, அவர் பேசிய வீடியோ ஒன்று பாகிஸ்தான் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. சுமார் 85 விநாடி ஓடும் இந்த வீடியோவில், தான் எப்படி விமானத்தில் இருந்து வெளியேறினேன் போன்ற விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் அபிநந்தன். அது முற்றிலும் எடிட் செய்யப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.