மற்ற சில போட்டி நிறுவனங்களைப் போன்று ஆப்பிளும் ஃபோல்டபிள் போனை உருவாக்க வேண்டும் என தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார் ஆப்பிளின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக். சமீபத்தில் வெளியான காப்புரிமைத் தகவல்களின்படி ஆப்பிள் மடக்கும் திரையைக் கொண்ட போனை உருவாக்கும் முயற்சியில் இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.