சென்னை போரூர் ராமநாதீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. இதில்  சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் தொடங்கிவைக்கிறார்.