தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் வரும் உலககோப்பை தொடருக்குப் பின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளதாக கூறியுள்ள அவர், ``ஓய்வு முடிவு, வாழ்க்கையில் நான் எடுத்த மிகப்பெரிய முடிவு" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.