பயங்கரவாதி மசூத் அசாரின் மகன் மற்றும் தம்பி உள்ளிட்ட 44 தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு கைது செய்து அதிரடி காட்டியுள்ளது. மேலும் 70 பயங்கரவாத இயக்கங்களுக்கும் தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் தேசிய நலனுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சுலைமான் கான் பேசியுள்ளார்.