2 -வது ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய விஜய் சங்கர், `இந்தப் போட்டியில் 43 அல்லது 44 -வது ஓவருக்குப் பிறகு நான் பந்துவீசுவேன் எனத் தெரியும். அதனால் சவாலுக்கு ரெடியாகவே இருந்தேன். எனக்குத் தெரியும் வெற்றிக்கு நான் வீசப்போகும் ஓவர் முக்கியம் என்று. அதனால் நான் மனதளவில் ஏற்கெனவே தயாராக இருந்தேன்’ என்றார்.