ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணியாற்றி வந்தார் ப்ரீத்தி ரெட்டி. இந்திய வம்சாவளியான இவர் கடந்த 3 -ம் தேதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல் காரில் சூட்கேஸில் நேற்று கண்டெடுக்கப்பட்டது. முன்னதாக அவரது முன்னாள் காதலனும் திங்கள் விபத்து ஒன்றில் பலியாகியுள்ளதால் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.