ராஞ்சி மைதானத்தின் ஒரு பெவிலியனுக்கு தோனியின்  பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை திறந்து வைக்குமாறு தோனியை அணுகியுள்ளனர் ராஞ்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள். ஆனால் `நானும் இந்த மைதானத்தின் ஒரு அங்கம் தான். எனது சொந்த வீட்டை நானே எப்படி திறந்து வைக்க முடியும்" எனக் கூறி அவர்களை நெகிழ்வைத்துள்ளார் தோனி.