சவுதி அரேபியா - இந்தியா இடையேயான விமானப் போக்குவரத்துக்கான உரிமையை இந்தியா 40% உயர்த்தியுள்ளது. இதன்மூலம், இரு நாடுகளுக்கிடைப்பட்ட போக்குவரத்தில் வாரத்திற்கு 28,000 விமானப்பயணிகள் பயனடையக்கூடும். இந்தியாவின் உள்கட்டமைப்புத்துறையில் 100 பில்லியன் டாலரை முதலீடு செய்யப்போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.