இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நாளை நடைபெறுகிறது. தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்த இந்திய வீரர்களுக்கு நேற்று இரவு விருந்து கொடுத்தார். இந்த விருந்தில், கேப்டன் விராட் கோலி, சஹால், பன்ட், தவான், கேதர் ஜாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கலந்துகொண்டனர்.