விருத்தாசலம் நகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி ஆகிய வரிகளைப் பன்மடங்கு உயர்த்தியதைக் கண்டித்து தி.மு.க சார்பில் அலுவலகத்தில் உள்ள மரத்துக்கு மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. நகராட்சி நிர்வாகம் மரம் போல் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளாமல் உள்ளதால் மரத்துக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தியதாக நகர தி.மு.க-வினர் தெரிவித்தனர்.