இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ஆர்மி தொப்பிகளுடன் களமிறங்கியுள்ளனர். புல்வாமா தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், பலியான குடும்பத்துக்கு மக்கள் உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்மி தொப்பியை இந்திய வீரர்கள் அணிந்துள்ளனர்.