இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா வீரர் கவாஜா அதிகபட்சமாக 104 ரன்களை குவித்தார். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.