இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 281 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.