நடிகர் சிவகார்த்திகேயன், கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தை தன் சொந்த நிறுவனமான எஸ்.கே புரோடக்‌ஷன்ஸ் மூலம் சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார். தன் சொந்த தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.