நடிகர் வைபவ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்துக்கு சிக்ஸர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். `6' சிக்ஸ் என்ற வார்த்தை திரைக்கதையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறதாம்.