நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமான `டியர் காம்ரேட்' தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகிறது. பரத் கம்மா எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே `கீத கோவிந்தம்' படத்தில் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தவர். இந்தப் படத்தின் டீசர் மார்ச் 17-ம் தேதி வெளியாகிறது.