சன் டிவியில் ஒளிபரப்பான `கிச்சன் கலாட்டா’, ஜி தமிழிலில் `அஞ்சறைப் பெட்டி’ என்கிற சமையல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ஃபரீனா ஆசாத்துக்கு அடித்திருக்கிறது ஒரு ஜாக்பாட். வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஒளிபரப்பாகவிருக்கும், 'தறி' என்கிற சீரியலில் காதுகேளா, வாய்பேச முடியாதப் பெண்ணாக நடிக்கிறார்.