இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கவாஜா சதம் அடித்தார். இதேபோல் இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஷமி, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 273 ரன்கள் எடுத்தால் தொடரை இந்திய அணி வெல்லலாம்.