பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமிழில் ராஷ்மிகாவுக்கு இதுதான் முதல் படம். இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாகிறது.