இன்று மாலை நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புறப்பட்டுச் சென்றனர். பாதுகாப்பு கருதி கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுப்படகில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தமுறை அந்த தடை நீங்கியதால் பக்தர்கள் நாட்டுப்படகுகளிலும் சென்றுள்ளனர்.