தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலுடன் மீதம் இருக்கும் 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, `அந்த 3 தொகுதிகளுக்கு மட்டும் பின்னர் தேர்தல் நடத்துவதில் என்ன பிரச்னை?’ எனக் கேள்வி எழுப்பினார்.