அரியலூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருமானூர் ஊராட்சி ஒன்றியம், சாத்தமங்கலம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்யும் பணியினை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.