மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த 10-ம் தேதி தேசிய அளவிலான புறாக்கள் பந்தயம் நடைபெற்றது.  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 புறாக்கள் பங்குபெற்றன. இதில் ஓசூர் புறா 52 மணி நேரத்தில் ஆயிரம் கி.மீ தூரத்தைக் கடந்து தேசிய அளவில் 12-வது இடத்தை பிடித்துள்ளது.