பால்கோட் தாக்குதலை அரசியலாக்கியதால் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளதாக, சோனியா காந்தியின் முன்னாள் உதவியாளரும் காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளருமான டாம் வடக்கன் தெரிவித்துள்ளார். இவர், திருச்சூரைச் சேர்ந்தவர். மீடியா கன்சல்ட்டன்டாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர். ஆனால், அடிப்படை அரசியலில் முன் அனுபவம் இல்லாதவர்.