கேரள மழை வெள்ள பாதிப்புக்கு, தனது இதய ஆபரேஷன் செலவுக்காக வைத்திருந்த பணத்தில் 5,000 ரூபாயைக் கொடுத்து, அனைவரையும் நெகிழவைத்த கரூர் சிறுமி அட்சயாவை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு, இரண்டாவது இதய ஆபரேஷனும் வெற்றிரமாக முடிய, மகிழ்ச்சியில் இருக்கிறது அட்சயாவின் குடும்பம்.