ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அவர், ``விரைவில் கிரிக்கெட் களத்தில் என்னைப் பார்க்க முடியும். தீர்ப்பை பிசிசிஐ மதிக்கும் என நம்புகிறேன். குறைந்தபட்சம் கிரிக்கெட் களத்துக்குள் நுழைவதற்காகவாது எனக்கு அனுமதி கொடுப்பார்கள்" என்றார்.