பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு சி.பி.சி.ஐ.டி காவலில் எடுத்து விசாரிக்க நான்கு நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக சி.பி.சி.ஐ.டி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, திருநாவுக்கரசு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். உயிருக்கு ஆபத்து இருப்பதால் இவ்வாறு ஆஜர்படுத்தப்பட்டார்.