ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் பாஜக கூட்டணி அமைக்கவுள்ளது எனப் பேசப்பட்டது. ஆந்திர முதல்வர் வேட்பாளராகப் பவன் கல்யாணை முன்னிறுத்தவும் பாஜக தயாராக இருந்ததாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார் பவன் கல்யாண்.