ஃபேஸ்புக்கில் 2 கோடிக்கும் மேலான கணக்குகளின் பாஸ்வர்ட்கள் எந்த ஒரு என்கிரிப்ஷனும் இல்லாமல் பிளைன் டெக்ஸ்ட்டாக (Plain Text) சேமிக்கப்பட்டிருந்தது. இவற்றை ஃபேஸ்புக் ஊழியர்கள் பார்த்திருக்கமுடியும். இதனால் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் உடனடியாக அனைவரும் தங்களது ஃபேஸ்புக் பாஸ்வர்ட்டை மாற்றுமாறு வலியுறுத்திவருகின்றனர்.