வரி ஏய்ப்பைத் தடுக்க, வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வரி ஏய்ப்பாளர்களின் ஃபேஸ்புக் கணக்கு உள்ளிட்ட பல விவரங்களையும் வருமான வரித் துறை கண்காணிப்பு செய்யவுள்ளது. எனவே, இனிமேல் வரி ஏய்ப்பாளர்கள் கணக்கில் காட்டாமல் தாங்கள் புதிதாக வாங்கிய கார், வீடு, மனை போன்றவை குறித்து பெருமிதமாக பதிவிட்டால் மாட்டிக் கொள்வார்கள்.