கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இன்று தொடங்கி வரும் 15-ம் தேதி வரை தொடர்ந்து 11 நாள்கள் திருவிழா நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.