உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் அதன் சொந்த ஊரான தென் கொரியாவில் 5G ஸ்மார்ட்போனை முதல் முறையாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலமாக உலகில் வர்த்தக முறையிலான 5G நெட்வொர்க் சேவை பயன்பாட்டுக்கு வந்த முதல் நாடு என்ற பெருமையையும் தென் கொரியா பெற்றிருக்கிறது.