உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா இன்று தொடங்கி 19-ம் தேதிவரை நடைபெற உள்ளது.  திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களும் உள்பிராகாரங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.