திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 16 -ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.  மறுநாள் 17.4.19 அன்று தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வர் என்பதால் கோயில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.