திருப்பூர் அருகே, தனியார் சாய சலவை ஆலையில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்பற்ற முறையில் இயங்கிவந்த சம்பந்தப்பட்ட சாய சலவை ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைக்க உத்தரவிட்டது. அதன் பேரில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர்.