வேலூர் தொகுதியில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம்,  `தேர்தல் ரத்து தொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை’ எனக் கூறியுள்ளது.