விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம், `தமிழரசன்'. `தாஸ்' படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார். இளையராஜா ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக ராஜா இசையில் கே.ஜே யேசுதாஸ் பாடியுள்ளார். 'நந்தலாலா' படத்திற்கு இளையராஜா இசையில் இவர் பாடுவது குறிப்பிடத்தக்கது.