வேலூர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஓட்டுக்குப் பணம் கட்டுக்கட்டாக இறைக்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி 2,000 ரூபாயும், தி.மு.க கூட்டணி 500 ரூபாயும் இரவோடு இரவாக விநியோகித்து கச்சிதமாகப் பணப்பட்டுவாடாவை முடித்துள்ளதாகத் தகவல் எழுந்துள்ளது.