சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வரும் 19 -ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி மாடுகளை நேர்ந்துவிடுதல், மொட்டை அடித்தல் போன்ற தங்கள் வேண்டுதல்களைச் செலுத்த பக்தர்கள் அழகர் மலையில் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.